ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையமாக மாறும் தனியார் பள்ளி - கரோனா

ஈரோடு: சத்தியமங்கலத்தில் புதிதாக தனியார் பள்ளி கரோனா சிகிச்சை மையமாக மாறுகிறது.

சத்தியமங்கலத்தில் கரோனா சிகிச்சை மையம்
சத்தியமங்கலத்தில் கரோனா சிகிச்சை மையம்
author img

By

Published : Apr 30, 2021, 3:07 PM IST

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக நோய்த்தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

100 படுக்கை வசதி ஏற்பாடு

தற்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி சத்தியமங்கலம் தனியார் பள்ளி தற்போது 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையமாக மாறுகிறது. ஒவ்வொரு வகுப்பறையிலும் 14 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பள்ளியில் 300 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் இருந்தாலும், தற்போது 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக படுக்கை அமைக்கும் பணி, காற்றோட்டமான ஜன்னல், கழிவறை தண்ணீர் வசதி ஆகிய முதற்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

நோயாளி எண்ணிக்கை அதிகமாகும்போது இப்பகுதியில் உள்ளவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவர் என வட்டாட்சியர் ரவிசங்கர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.