ஈரோடு மாவட்டம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உள்ள சித்தோடு சாலைப் போக்குவரத்து, பொறியியல் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, இன்று (ஏப். 29) ஈரோடு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், முகவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல் துறையினர் உள்பட 779 மேற்பட்டோருக்கு கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் நாளை மறுநாள் கிடைக்கும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.