ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி மக்கள் அதிகாலை நேரத்திலேயே கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அனைத்து வழிப்பாட்டு தலத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
குறிப்பாக ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐந்து வகையான கனி வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிறுவியாபாரிகள், வணிகர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நோட்டு, புத்தகங்களை வைத்து புதுகணக்கு தொடங்கி வியாபாரம் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வரும் 3ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் பண்ணாரி அம்மன் கோயில் பக்தர்கள் அனுமதியின்றி ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லாததால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் சித்திரைக் கனி விழா, இன்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சத்தியமங்கலத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே தனிமனித இடைவெளி விட்டு கனிகள் வைத்து வழிபட்டனர்.
இதையும் படிங்க...ஊரடங்கில் தொடரும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்!