ETV Bharat / state

கரோனா பாதிப்பால் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் திட்டம்

author img

By

Published : May 30, 2020, 3:29 PM IST

ஈரோடு: கரோனா பாதிப்பால் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களை குறைக்க முடிவு
பாடத்திட்டங்களை குறைக்க முடிவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். ஜூன் ஒன்றாம் தேதி வழக்கமாக பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழுதான் முடிவு செய்யும். ஆண்டுதோறும் 210 நாட்கள் பள்ளி வேலை நாளாக இருந்த நிலையில், தற்போது வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பாட திட்டங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழு அறிக்கையை அளித்த பின் பாடங்கள் குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிகமான கரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் செல்லூர் ராஜு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.