ஈரோடு மாவட்டத்தில் கடந்த 37 நாள்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிக்கு வந்தவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சேலம் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 41 நாள்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (மே 28) ஈரோட்டைச் சேர்ந்த 40 வயதுடையவர் தனது மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து விமானம் மூலம் ஈரோடு வந்தார். இவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சூளை பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு சோதனை செய்து பார்த்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஈரோட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 69 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையும் படிங்க... ஈரோட்டில் 41 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா!