நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்.. திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்! - ஆதி பில்டர்ஸ்
ஈரோடு மாநகராட்சி 8வது வார்டு கவுன்சிலரும் ஆதி பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளருமான ஆதி ஸ்ரீதர் நிலத்தை அபகரிப்பு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கபட்ட நிலத்தின் உரிமையாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Published : Sep 2, 2023, 11:44 AM IST
ஈரோடு: நடிகர் சரத்குமார் நடித்து 1998ஆம் ஆண்டு வெளி வந்த சிம்மராசி படத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இந்த கோயிலில் எடுத்த பாடலுக்கு பின்பு தம்பிகலை அய்யன் சுவாமி கோயில் புகழ் பெற்ற கோயிலாக மாறியது. இந்த கோயிலின் எதிரே உள்ள 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை 2011ஆம் ஆண்டு 50க்கும் மேற்பட்ட வீட்டு மனையாக விற்பனை செய்யபட்டது.
இந்த வீட்டு மனைகளை ஏழை எளிய மக்கள் 2 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்து வாங்கினர். ஆனால் நிலம் வாங்கினாலும் வீடுகள் கட்ட போதிய பொருளாதாரம் இல்லாத நிலையில் சிறுக சிறுக சேர்த்து வாங்கிய நிலத்தை 13 ஆண்டுகள் பின்பு விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு கடந்த 6 மாதமாக வந்த செல்போன் அழைப்பு பேர் இடியாக மாறியதாக கூறப்படுகிறது.
தான் ஈரோடு மாநகராட்சி 8வது வார்டு கவுன்சிலர், ஆதி பில்டர்ஸ் உரிமையாளர் ஆதி ஸ்ரீதர் பேசுவதாகவும், தாங்கள் வாங்கிய நிலத்தை மொத்தமாக வாங்கி கொள்வதாகவும் கூறி அரசியல் அழுத்தம் கொடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மக்களும் வீட்டு மனையை கொடுத்து வாங்கிய பணம் கிடைத்தால் போதும் என அரசியல் அழுத்தம் தாங்க முடியாமல் நிலத்தை கிரயம் செய்து முன்வந்ததாக சொல்லப்படுகிறது.
அனைத்து நிலங்களை வாங்கிய ஆதி பில்டர்ஸ் இரண்டு நபர்களுடைய நிலத்தை மட்டும் வாங்காமல் விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைத்து மனைகளுக்கும் சேர்த்து கம்பி வேலி போட்டதாகவும் நிலத்தை விற்காத இரண்டு நபர்களுக்கும் கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
இதனை தொடர்ந்து, நிலத்தை விற்காத இரண்டு பேர் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி நீதிமன்றம் மூலமாக நோட்டிஸ் அனுப்பி உள்ளார். நிலத்தை பறிகொடுத்த இரண்டு பேர் ஆதி ஸ்ரீதர் நீதிமன்றம் மூலமாக அனுப்பிய நோட்டிஸ்க்கு நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது பதிலை கூறியுள்ளனர்.
2011ஆம் ஆண்டு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாங்கிய நிலம் தற்போது 20 லட்சத்திற்கும் போகும் நிலையில் அதனை வாங்கிய விலைக்கு ஆதி பில்டர்ஸ் ஆதி ஸ்ரீதர் கேட்பதாக தெரிவித்து உள்ளனர். அத்துடன் நிலத்தை கொடுக்க கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் இதனால் தங்களது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வராலாம் என்பதால் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கபட்ட இரண்டு நபர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் இளம் பெண் கொலை: காதலன் தற்கொலை முயற்சி..திருப்பூரில் நடந்தது என்ன?