ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசுக்கு விருப்பமில்லை' - முத்தரசன் குற்றச்சாட்டு! - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு : தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அதிமுக அரசிற்கு விருப்பமில்லை, அதன் ஒருபகுதியே திடீரென மறைமுகத் தேர்தலுக்கான உத்தரவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

communist_mutharasan
communist_mutharasan
author img

By

Published : Nov 28, 2019, 1:27 PM IST

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் , 'மகாராஷ்டிரா விவகாரத்தில் ஆளுநர் போன்ற மிக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கக் கூடிய மகத்தான பொறுப்பில் இருக்கிறார்கள்.

பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவருடைய அணுகு முறையும் நடவடிக்கையும் அமைய வேண்டும். ஆனால் மராட்டிய ஆளுநர், பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறார்' என்றார்.

மேலும், ' தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று தான் கூட்டியிருக்கிறது. முன்னதாகவே இதனை நடத்தி இருக்க வேண்டும். தேர்தலை எப்படி நடத்தப் போகிறோம் என்பதை எல்லாம் வெளிப்படையாக கருத்துகளை அறிந்து, இட ஒதுக்கீடு போன்ற அம்சங்களை வெளிப்படையான முறையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவித்து, கருத்துகளை கேட்டு இருக்க வேண்டும்' என்றார்.

வெளிப்படைத் தன்மையற்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா என்ற ஐயப்பாடு நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிமுக தேர்தலை நடத்த விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

தேர்தலை நடத்துவோம், வெற்றி பெறுவோம் என்று ஒருபக்கம் கூறி வந்தாலும் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொள்ள முடியுமோ அந்த சூழ்ச்சிகளை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திடீரென மறைமுக தேர்தலுக்கான உத்தரவை பிறப்பித்தது' என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:

மந்தகதியில் ரயில்வே பாலப்பணி : விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ28

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசுக்கு விருப்பமில்லை ; முத்தரசன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசிற்கு விருப்பமில்லை என்றும் அதன் ஒருபகுதியே திடீரென மறைமுக தேர்தலுக்கான உத்தரவு என்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

மகாராஷ்டிரா விவகாரத்தில் ஆளுநர் போன்ற மிக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய மகத்தான பொறுப்பில் இருக்கிறார்கள். பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய அணுகுமுறையும் நடவடிக்கையும் அமையவேண்டும் ஆனால் மராட்டிய ஆளுநர், பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறார் என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்தை இன்றுதான் கூட்டியிருக்கிறது. முன்னதாகவே இதனை நடத்தி இருக்க வேண்டும். தேர்தலை எப்படி நடத்தப் போகிறோம் என்பதை எல்லாம் வெளிப்படையாக கருத்துக்களை அறிந்து,இட ஒதுக்கீடு போன்ற அம்சங்களை வெளிப்படையான முறையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவித்து கருத்துக்களை கேட்டு இருக்க வேண்டும் என்றார்.

வெளிப்படைத் தன்மையற்ற நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்ற ஐயப்பாடு நீடித்து வருகிறது.
இதற்கு காரணம் அதிமுக தேர்தலை நடத்த விரும்பவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. தேர்தலை நடத்துவோம் வெற்றி பெறுவோம் என்று ஒருபக்கம் கூறி வந்தாலும் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொள்ள முடியுமோ அந்த சூழ்ச்சிகளை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திடீரென மறைமுக தேர்தலுக்கான உத்தரவை பிறப்பித்தது என்றார்.

வெங்காயத்தின் விலை என்றுமில்லாத அளவிற்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது இதைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் வெளியில் இருந்து தேவையான அளவு இறக்குமதி செய்து விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இதுவரை அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் கிடைக்க செய்ய உறுதியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு மதுபான கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு இலக்கை நிர்ணயிக்கும் அரசாங்கம் அடிப்படை தேவையான வெங்காயம் கிடைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

மேலும் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு பெறுவது வரவேற்கத்தக்கது, தற்போது 3 கல்லூரிகள் அனுமதி பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கிறது. இது நல்ல செய்தி வரவேற்கத்தக்கது. 33 கல்லூரிகளிலும் 4 ஆயிரத்து 200 மருத்துவ மாணவர்களுக்கான இடம் இருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைப்பதற்கான உத்தரவாதம் ஏதும் இல்லை. இதில் மிகப் பெரும் தடையாக இருப்பது நீட் நுழைவுத்தேர்வு, மத்திய அரசாங்கத்திடம் இணக்கமாக இருந்து மருத்துவக் கல்லூரிகள் பெறுவதாக கூறும் முதலமைச்சர் பிரதமருக்கு நன்றி கூறும் முதலமைச்சர் இந்த இணக்கத்தை பயன்படுத்தி நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெற வேண்டும் அப்படியில்லையென்றால் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் இடம் கூட தமிழக மாணவர்களுக்கு கிடைக்காது என்று தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு பல அறிவிப்புகளை செய்திருக்கிறது. அரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு எல்லாம் அறிவித்து இதற்கு பெரும் தொகையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கு ஒதுக்கப்படும் நிதி அரசியல் பாகுபாடின்றி வழங்கவேண்டும் கடந்தகால அனுபவம் என்பது கசப்பான அனுபவம். ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு மட்டும் தருவது அல்லது அவர்கள் சிபாரிசு செய்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் உறுதியாக பொங்கல் பரிசு கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலவளவு படுகொலை சம்பவத்தில் தண்டிக்கப்பட்ட 13 பேர் முன்னதாகவே அரசாங்கத்தால் அவசரம் அவசரமாக விடுதலை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

Body:மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மூன்று நான்கு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. 15 நாட்களுக்குள் வழங்க தவறினால் அபராதமாக ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 50 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் அப்படி சட்டம் இருந்தும் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் கொள்கைகளால் வேலையின்மை அதிகரித்து வருகிறது தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதிலிருந்து தொழிலாளர்கள் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.

கோவையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரம் பேர் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதற்கு இதுவே உதாரணம் என்றார்.

Conclusion:தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தான் காரணம் என ஒரு அமைச்சர் கூறுவது நகைப்பிற்குரியது. திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறுவது பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய முறையில் அரசு யுக்திகளை வகுக்காமல், பிரச்சனைகளை தீர்க்க தெரியாத காரணத்தினால் பிறர் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும் முயற்சி என்றும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.