ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி பவானிக்கு வருகை தந்தார். அப்போது, முதலமைச்சர் பழனிசாமியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கேசி கருப்பணன் மற்றும் வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர், "ஸ்டாலின் நடத்தும் மக்கள் கிராம சபையால் எந்த பயனும் இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலின்போது மக்களிடத்தில் மனு வாங்கினாரே அதை நிறைவேற்றினாரா? மக்களை ஏமாற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார். அதிமுக மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறிவருகிறார். திமுகவினர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன" என்றார்.
தொடர்ந்து அந்தியூர், டி.எம். பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்து வரும் நிலையில், சத்தியமங்கலத்தில் பரப்புரையை தொடங்கி புன்செய் புளியம்பட்டியில் நிறைவு செய்கிறார்.
இதையும் படிங்க: புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!