ETV Bharat / state

விளங்காத அதிமுக அரசு - விடியா திமுக அரசு: ஈரோடு மன்றக் கூட்டத்தில் உச்சகட்ட மோதல்! - அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

விடியா திமுக அரசு, விளங்காத அதிமுக அரசு என ஈரோடு மாமன்ற அவசர கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மத்தியில் மாறி மாறி குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈரோடு மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக இடையே உச்சகட்ட மோதல்

author img

By

Published : Jul 14, 2023, 7:25 PM IST

ஈரோடு மன்றக் கூட்டத்தில் அதிமுக, திமுக இடையே உச்சகட்ட மோதல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 6 வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்களும், 54 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் கவுன்சிலர்களும் உள்ளனர். இன்று (ஜூலை 14) மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநகராட்சியின் அவசரக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறும் என ஈரோடு மாநகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரம் காலதாமதமாக 12 மணிக்கு தொடங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு மாநகராட்சி மேயருக்கு ரூபாய் முப்பதாயிரம் ஊதியம், துணை மேயருக்கு ரூபாய் பதினைந்தாயிரம் ஊதியம், கவுன்சிலர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊதியம் என அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மன்றக் கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியாருக்கு டெண்டர் விடும் தீர்மானத்தை எதிர்ப்பதாக அதிமுக கவுன்சிலர் கூறினார்.

அதற்கு ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர், விளங்காத அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட திட்டங்களை தான் திமுக தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாக ஆவேசமாகக் கூறினார். ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், சாக்கடை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு விளங்காத அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தான், தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு எல்லாம் விளங்காத அதிமுக அரசுதான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள், விடியா திமுக அரசின் காரணமாக தான் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, திமுக அதிமுக கவுன்சிலர்கள் 'விளங்காத அதிமுக ஆட்சி, விடியா திமுக ஆட்சி' என மாறி மாறி குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர், ''மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். புதிய இட வசதி இல்லாத அங்கன்வாடி பள்ளிகளை மாற்ற வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டி 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ், பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளனர்.

இதனை மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியாருக்கு டெண்டர் விடும் தீர்மானத்தை எதிர்த்தும், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள சூரியன் பாலத்தை சித்தோடு பேரூராட்சி உடன் சேர்த்தால் குடிநீர் பிரச்னை ஏற்படும் எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: Chandrayaan 3: நிலவை ஆராயும் சந்திரயான்-3.. புவி நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.