ஈரோடு: நடு பாளையத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் சந்தைப்பேட்டையில் ஸ்ரீதரன் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் குளோரின் வாயு விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். சிலிண்டரில் இருந்து இன்று (டிசம்பர் 11) மதியம் குளோரின் வாயு கசிந்துள்ளது.
இதனை ஆலை உரிமையாளர் தாமோதரன் (43) சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக குளோரின் வாயு தாக்கி அவர் உயிரிழந்தார். அங்கிருந்த 13-க்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆலையில் உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் குளோரின் வாயு கசிவு ஏற்படமால் இருக்க துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்