ETV Bharat / state

மக்கள் சமச்சீர் ஆன வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடல்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு அவினாசித்திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் சமச்சீர் ஆன வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடல் - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Aug 26, 2022, 5:04 PM IST

ஈரோடு: பெருந்துறை அருகே சரளையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளைத்தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் 63,858 நபர்களுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் மொத்த மதிப்பீடு 612.77 கோடி ரூபாய். முன்னதாக அவர் பெருந்துறை கிரே நகர் பகுதியில் நடைபெற்று வரும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளைப்பார்வையிட்டார். பின்னர் விழாவில் அவர் பேசுகையில், ”ஈரோடு ரிங்ரோடு திட்டத்தை விரிவாக்க ஆய்வு அறிக்கை உருவாக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

வேளாண் மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 16.82 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தாளவாடி நல்லம்பட்டி மற்றும் ஈரோட்டில் வேளாண் பொருட்களைப் பாதுகாக்க குளிர்பதனக்கிடங்குகள் உருவாக்கப்படும். மஞ்சள் ஏற்றுமதி முனையம் 10 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படும். தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் எக்ஸ்ரே வசதியுடன் 25 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மாநிலத்தில் சாதனைப்படைத்த நெல் உற்பத்தியும், அனைத்து சாதியினரையும் கோயில்களில் அர்ச்சகர்களாக மாற்றும் அரசு சட்டத்தை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுக அரசின் மாபெரும் சாதனைகள்’’ என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் ’’அனைத்து மாவட்டங்கள், துறைகள் மற்றும் மக்கள் சமச்சீர் ஆன வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடல் கொள்கை. இப்போது, ​​பெண்களுக்கு இலவசப்பேருந்துப்பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற முக்கியத் திட்டங்கள் மற்ற மாநிலங்களால் வரவேற்கப்படுகிறது, பின்பற்றப்படுகிறது. அதுதான் திராவிட மாதிரி ஆட்சியின் வெற்றி.

திமுக ஆட்சிக்கு வந்ததும், சிஎன் கல்லூரியை அரசு கல்லூரி ஆக்கியது. ஈரோட்டில் பாதாளச்சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்தியது. ஈரோட்டுக்கு 2 பேருந்து நிலையங்கள் உருவாக்க முடிவு எடுத்தது. கொடிவேரி குடிநீர் திட்டம் முடிக்கப்பட்டது.

மலைப்பகுதிகளில் டெலிமெடிசின் திட்டம் தொடங்கப்பட்டது மற்றும் ஆட்ரல் ஆப் உருவாக்கப்பட்டது போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” எனப் பேசினார். விழாவில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, எம்.பி.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விதிமுறைப்படி 13 துறைகளின் அனுமதி பெற்று கருணாநிதி சிலை அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.