ETV Bharat / state

ஈரோட்டில் சிஐஎஸ்எப் பெண் அதிகாரி வீட்டில் திருட்டு.. சென்னையில் திருமணம் நடந்த நிலையில் பகீர் சம்பவம்! - கமாண்டோ வீட்டில் திருட்டு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண் கமாண்டோவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து நகை, இரு சக்கர வாகனம் ஆகியவைகளை திருடிச் சென்றுள்ளனர்.

Central Industrial Security Force commando house in Erode was robbed while she going to chennai with family for her wedding
மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டோவின் திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த நிலையில் ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
author img

By

Published : Apr 28, 2023, 11:39 AM IST

ஈரோட்டில் சிஐஎஸ்எப் பெண் அதிகாரி வீட்டில் திருட்டு

ஈரோடு: ஈரோடு கனிராவுத்தர் குளம், சின்னதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயதுரை, ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாந்தி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சரவணன் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

சுனந்தாவும் இவரது தம்பி சரவணன் ஆதித்யாவும் மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சுனந்தாவுக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் (ஏப்.26) இரவு இவர்களது வீட்டில் உள்ளே புகுந்த கொள்ளையன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருள் இரண்டு சக்கரம் வாகனம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளான்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அருகாமையில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பெயரில் சென்னையிலிருந்த சுனந்தா காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன் சித்திரம் காவல்துறையினர் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் அதிகாரியின் திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வடமாநில கோயில்களுக்கு ஹெலிகாப்டர் சேவை எனக் கூறி மோசடி - பக்தர்களுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.