ETV Bharat / state

குறுக்க இந்த கௌசிக் வந்தா? சாலையின் குறுக்கே வந்த லாரி; ஹெல்மெட்டால் உயிர் தப்பிய இளைஞர்..! - சாலையின் குறுக்கே வந்த லாரியால் விபத்து

Erode Accident CCTV: சத்தியமங்கலம் அருகே லாரியின் மீது ஸ்கூட்டர் மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் கீழே விழுந்து 20 அடி தூரம் இழுத்துச் சென்று லாரியின் மீது மோதி உயிர் தப்பிய வாலிபர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலை தப்பியது.

சாலையின் குறுக்கே வந்த லாரி; ஹெல்மெட்டால் உயிர் தப்பிய இளைஞர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 7:02 PM IST

Updated : Dec 25, 2023, 7:22 PM IST

சாலையின் குறுக்கே வந்த லாரி; ஹெல்மெட்டால் உயிர் தப்பிய இளைஞர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் இன்று (டிச.25) காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காந்தி நகர் அருகே சாலையில் ஒரு லாரி சாலையில் மெதுவாகத் திரும்பிக்கொண்டிருந்தது. அவ்வழியே ஸ்கூட்டரில் சென்ற ஒரு வாலிபர், லாரி திரும்புவதைக் கண்டு லாரியின் மீது மோதி விபத்தைத் தவிர்ப்பதற்காக, திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

மழை ஈரம் காரணமாக ஸ்கூட்டர் நிலை தடுமாறி, 20 அடி தூரம் சறுக்கிக் கொண்டே கீழே விழுந்தார். இதில் வாலிபர் சாலையில் நின்ற லாரியின் மீது மோதினார். வாலிபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த காட்சி காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

காவல்துறையினர் இந்த சிசிடிவி வீடியோவை வெளியிட்டு ஹெல்மெட் அணிந்ததால் விபத்தில் சிக்கிய வாலிபர் உயிர் தப்பியுள்ளதாகவும், எனவே, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணைப்பகுதியில் பறவைகளைத் துரத்தி குறும்பு செய்த குட்டி யானை..!

Last Updated : Dec 25, 2023, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.