ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஜல்லி ஊரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகப் புகார் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜல்லி ஊரில் திலகவதி என்பவரின் தோட்டத்தில் கட்டியிருந்த வெள்ளாடுகளை, மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. அவர், விவசாய பணிகள் முடிந்து வீட்டிற்குச் சென்றபோது, வெள்ளாடுகள் இறந்து கிடப்பதைக் கண்டு கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த கிராம மக்கள் உயிரிழந்த ஆடுகளைப் பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, அங்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியில் பதிவான கால் தடத்தை வைத்து ஆய்வு செய்தபோது, அது சிறுத்தை என்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடுகள் செய்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாகவே, தோட்டத்து பகுதியில் சிறுத்தைகள் நடமாடி, ஆடு மாடுகளை கொன்றுள்ளது. இதனால், இந்த சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்காமல், துப்பாக்கியால் சுட்டு சிறைபிடித்து, அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!