ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் பழுது நீக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு வழக்கம்போல் வாகன மையத்தைப் பூட்டிவிட்டு பணியாளர்கள் சென்றனர்.
ஆனால், இன்று அதிகாலை பழுது நீக்கும் மையத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தபட்டிருந்த விலை உயர்ந்த கார் ஒன்று திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அம்மையத்தில் பொருத்தபட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது மூகமூடி அணிந்த மூன்று நபர்கள் வாகனங்களை லாவகமாக திருடிச் சென்றது தெரியவந்தது.
அக்காட்சிகளின் அடிப்படையில், வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் காவல் துறையினர் கார் திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.