ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "வடகிழக்கு பருவமழையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரது நடவடிக்கையின் காரணமாக பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் உயர் அலுவலர்கள் பொதுமக்களை சந்தித்து நிவாரணங்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அரசாக அதிமுக திகழ்கிறது. நம்பியூர் பேருந்து நிலைய கட்டடத்தில் முறைகேடு என கனிமொழி குறைகூறுகிறார். அங்கு நடைபெறும் பணிகளை தெரிந்து அவர் பேசவேண்டும்.
கரோனா மருந்து தயார் செய்த பிறகு அதன் உற்பத்தி திறனை பொறுத்து மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கப்படும். அதன்படி மாணவர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை இருமொழி கொள்கைதான் நிலைபாடு. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: ஆண்டியப்பனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு? அமைச்சர் கே.சி.வீரமணி பதில்