குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என பா.ஜ.கவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீதும் போராட்டத்திற்கு தூண்டுதலாக செயல்படுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினரும் இந்து முன்னணி அமைப்பினரும் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: உலகமயமாக்கல் தமிழை விழுங்கிவிடக் கூடாது - வைரமுத்து பேச்சு