ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - ஈரோடு மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பு
author img

By

Published : Oct 1, 2021, 10:52 PM IST

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இதனிடையே கடந்த சில நாள்களாக நீலகிரியில் மழை பொழிந்துவருவதால், 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. அதன்படி இன்று (அக். 1) பவானிசாகர் வட்டாரத்தில் மழையளவு 14.4 மி.மீட்டராகப் பதிவாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 2,826 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 6,958 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.01 அடியாகவும், நீர் இருப்பு 29.52 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6,958 கனஅடியாகவும் அணையிலிருந்து பாசனத் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேலும் சத்தியமங்கலம் வட்டாரத்தில் பரவலாக மழை பெய்ததால் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.