ஈரோடு: பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்குகிறது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பெரிய கொடிவேரி அணையில் வெள்ளநீர் தடுப்பு சுவரை தாண்டி தண்ணீர் செல்லும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து ஜப்தி