ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கருவி உணர்வி (சென்சார்), தடங்காட்டி (ஜி.பி.எஸ்.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி வேகமாகச் சென்று நீரில் தத்தளிப்பவரை மீட்டு கரைக்கு அழைத்துவரும்.
இதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் தீயணைப்பு மீட்பு பணிக்கு எந்தளவில் உதவும் என்பதனைக் கண்டறியும் வகையில் தீயணைப்புத் துறையினர் பெரிய கொடிவேரி அணையில் சோதனை ஓட்டம் நடத்தினர்.
இதில், கருவியைப் பயன்படுத்தி பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின் முடிவில் கருவி மீது தீயணைப்புத் துறையினருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யவிருப்பதாகவும் இந்தக் கருவியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்த அமைச்சர்கள்