ETV Bharat / state

பாலதண்டாயுதபாணி கோயிலில் நடந்த சுயம்வரா பார்வதி யாகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - பாலதண்டாயுதபாணி கோயில்

சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் நடந்த சுயம்வரா பார்வதி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாலதண்டாயுதபாணி கோயிலில் நடந்த சுயம்வரா பார்வதி யாகம்

author img

By

Published : Jun 9, 2022, 6:40 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுயம்வரா பார்வதி யாகம் நடைபெறுவது வழக்கம்.

கரோனா காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று சுயம்வரா பார்வதி யாகம் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் தொடங்கிய யாக குண்டம் நிகழ்ச்சியில் தீக்குண்டம் வார்க்கப்பட்டு வேத விற்பனர்கள் மந்திரம் ஓதினர்.

முருகர் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோர்கள் அழைப்பு ஆகியவை நடந்தது. நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களத்ரதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவர்த்தி, முன்னோர் சாபம் உட்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து முக்கிய நிகழ்வான பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் பழம், பூஜைப்பொருள்கள், விடுபூக்கள், எலுமிச்சைப் பழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை கொண்டுவந்து வழிபட்டனர்.

பாலதண்டாயுதபாணி கோயிலில் நடந்த சுயம்வரா பார்வதி யாகம்

ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகியப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த யாக பூஜையில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக கோயில் நிர்வாகி கே.டி. பழனிச்சாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை கோயில் திருவிழாவில் தீ விபத்து - உயிர் தப்பிய பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.