ETV Bharat / state

இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் சா.மு.நாசர்

author img

By

Published : Jan 27, 2023, 11:14 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் பெரியபள்ளிவாசலில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பு பணியில்- ஆவடி சா.மு.நாசர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பு பணியில்- ஆவடி சா.மு.நாசர்
இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் சா.மு.நாசர்

ஈரோடு:பெரியபள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் திமுக ஆட்சியின் ஒன்றரை ஆண்டில் ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்துள்ள திட்டங்களை அமைச்சர் நாசர் பட்டியலிட்டு விளக்கி கூறினார். மேலும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானது திமுக அரசு எனவும், ஈரோட்டிற்கு இன்னும் பல திட்டங்கள் வந்து சேர காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் தந்தை பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாணவர் அணி மாநில இணை செயலாளர் பூவை ஜெரால்டு, தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சின்னையன், முன்னால் பேரூராட்சி தலைவர் போக்சேட், 15வார்டு செயலாளர் மெளலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.