கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் எளிய முறையில் கைகளை சுத்தம் செய்யக் கூடிய இரண்டு விதமான தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரங்களை மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் ஆர்.கே.பூபேஷ், விரிவுரையாளர் எம். சீனிவாசன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரங்கள் குறித்து இயக்கும் மற்றும் விதத்தை கல்லூரி நிர்வாகிகள், அனைத்து துறையைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து மாணவர் ஆர்.கே.பூபேஷ் கூறியதாவது, "இந்த தானியங்கி சுத்திகரிப்பு படைப்புகளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் வைத்து பயன்படுத்தலாம். இந்த தானியங்கி சுத்திகரிப்பு படைப்புகள் மூலம் மிகவும் விரைவாகவும், எளிதான முறையிலும் கைகளைச் சுத்தம் செய்யலாம். இதன் பயன்பாட்டை புரிந்து கொண்டு கல்லூரி நிர்வாகம் அதிக படைப்புகளை உற்பத்தி செய்து மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது" என்றார்.
கல்லூரி மாணவர் ஆர்.கே.பூபேஷ், விரிவுரையாளர் எம்.சீனிவாசனும் பேரிடர் காலத்தில் எளிமையான முறையில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் படைப்புக்களைக் கண்டறிந்து சாதனை புரிந்தது அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மாடி வீட்டை பறவைகளின் சரணாலயமாக மாற்றிய பெண்: பறவைகள் கூட்டம் பார்க்கவே அழகு...!