ETV Bharat / state

அத்திக்கடவு - அவினாசி திட்டம்: விடுபட்ட 3 குளங்களில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம் - Athikadavu – Avinashi project

அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட மூன்று குளங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.

Athikadavu – Avinashi project
குழாய் பதிக்கும் பணி
author img

By

Published : Jul 26, 2021, 2:41 PM IST

ஈரோடு: அத்திக்கடவு- அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றில் உபரியாக வரும் நீர் ஈரோட்டிலுள்ள காளிங்கராயன் அணைக்கட்டு அருகே தேக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குளம் குட்டைகளில் சேமிக்கப்படும்.

இதற்காக ஆயிரத்து 626 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்படுவதுடன், குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குளங்களும், குட்டைகளும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

முன்னதாக இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலுள்ள நல்லூர் குளம், புங்கம்பள்ளி குளம், காவிலிபாளையம் குளம் ஆகியவை சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது விடுபட்ட மூன்று குளங்களும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

தற்போது வரப்பாளையம் பகுதியில் குழாய் பதிப்பதற்காக ராட்சத குழாய்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காவிலிபாளையம், காராப்பாடி ஊராட்சியில் உள்ள மாரம்பாளையம் பகுதியில் இருந்து நல்லூர் குளத்தை குழாய்கள் மூலம் இணைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.