ETV Bharat / state

கிளியைப் பறக்கவிட்டு ஜோசியரை கூண்டில் அடைத்த காவல் துறை! - green parrot is banned from domestic use

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கிளிகளைக் கூண்டில் அடைத்து ஜோசியம் பார்த்துவந்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஈரோடருகே கிளி ஜோசியம்: கிளியைப் பறக்க விட்டு ஜோசியரை கூண்டில் அடைத்த காவல் துறை..!

author img

By

Published : Dec 9, 2021, 10:25 PM IST

ஈரோடு: அந்தியூர் அருகே மாரியம்மன் கோவில் வீதியில் ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் குமார் (40), திருநெல்வேலி மாவட்டம் ரத்தினம் மகன் வேலு (60) உள்ளிட்ட இருவரும் ஈரோட்டில் பச்சைக் கிளிகளை கூண்டில் அடைத்துவைத்து ஜோசியம் பார்த்துவந்துள்ளனர்.

பச்சைக் கிளி, வனத்தில் வாழ வேண்டிய வனப்பறவை, அதை கூண்டில் அடைப்பதும் வீட்டில் வளர்ப்பதும் வனத் துறைச் சட்டத்திற்கு முரணான செயல் ஆகும்.

இந்நிலையில், இதனையறிந்த அந்தியூர் வனத் துறையினர் விரைந்துசென்று, ஜோசியர்களிடமிருந்து கிளிகளைப் பறிமுதல்செய்தனர். பின், அந்தக் கிளிகளை அடர்ந்த வனப்பகுதியில் பறக்கவிட்டனர். தொடர்ந்து, அந்த இரு ஜோசியர்கள் மீதும் வன உயிரினக் குற்ற வழக்கு தொடரப்பட்டு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒமைக்ரான்... காலதாமதப்படுத்த முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது - வைராலஜிஸ்ட் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.