ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'கிராமத்தை நோக்கி' என்ற கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அகில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்தத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் கேசவ் தந்த் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, மோடி ஆட்சியால் எவருக்கும் பயனில்லை, காங் ஆட்சி வந்தால் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் போல தமிழகத்தில் விவசாயகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த கிராமத்து விவசாயி கூலி பெண் தொழிலாளி இளங்கோவனை பார்த்து, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்கிறேன் என சொல்லும் நீங்கள் எங்களை போன்ற விவசாயத் கூலித் தொழிலாளர்கள் வங்கியில் நகை அடகு வைத்து பணம் பெற்றுள்ளோம்.
இதனை எப்படி தள்ளுபடி செய்வீர்கள் என்றார். சற்றும் எதிர்பாராத கேள்வியால் அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் சற்று சுதாரிக்குக்கொண்டு, தங்களின் கோரிக்கையை ராகுல்காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்று விவசாயக்கூலிகளின் அடகுகடனை தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்வோம் என பதிலளித்தார்.
விவசாய கூலி பெண் தொழிலாளி கேட்ட கேள்வியால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.