ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் கிருமிநாசினி இயந்திரங்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு கிராமங்கள் தோறும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் வகையில் ஊராட்சிகளுக்கு இயந்திங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில், பணிபுரியும் பணியாளர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக கிருமிநாசினிகளை தெளிக்கக்கூடிய நவீன இயந்திரங்கள், முகக்கவசங்கள், கையுறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஒவ்வொரு ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கினார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கை, கால், கண் பார்வை இழந்து சுய தொழில் செய்து வந்த 58 மாற்றுத்திறனாளிகளுக்கு 20 கிலோ அரசி , காய்கறிகள், மளிகை பொருள்களையும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் பால்களைத் தவிர வேறு பொருள்களை விற்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 144 தடை உத்தரவை மக்கள் அனைவரும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தருமபுரியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி - அமைச்சர் கே.பி. அன்பழகன்