ETV Bharat / state

'ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும்' - அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும் என பாஜ‌க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai
annamalai
author img

By

Published : Feb 1, 2023, 5:20 PM IST

Updated : Feb 1, 2023, 7:41 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், 'இன்றைய பட்ஜெட் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, 25 ஆண்டுகளுக்கான அமிர்தகால பட்ஜெட்டுக்கு இது ஒரு அச்சாணியாக இருக்கும். அதில் உள் கட்டமைப்புக்காக 10 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு முதலீடு செய்யதுள்ளது.

நகர்ப்புற வேலைவாய்ப்பு நிலவரத்தில், கணக்கெடுப்பின்படி கரோனா கால கட்டத்தில் இருந்து முழுமையாக நாடு மீண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளதை காட்டுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளரை நியமிப்பது போன்றவை தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

சற்று பொறுமையாக இருங்கள். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்ற பேச்சுக்கள் தான் அடிபடுகிறது. அந்த கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பில் மக்களுக்கு என்ன செய்வோம், என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இடைத்தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் பண பலத்தையும் அதிகார அரசியல் இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். நாட்டை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியில் பல கட்சிகள் இணைந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் மாநில அளவிலான அந்தஸ்தை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் சிலை கலாசாரம் அனைத்துப்பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது. போட்டி போட்டு சிலை வைக்கின்றனர்.

13 மீன்பிடி கிராமங்கள் உள்ள பகுதியில் மக்கள் பணத்தைச் செலவுசெய்து, பெரிய பேனா வைப்பதில் திமுக-வினர் அவசரம் காட்ட வேண்டுமா? பேனா சிலை வைக்கும் விவகாரத்தில், அது தொடர்பான ஆலோசனையின்போது பாஜக கட்சி சார்பில் பங்கேற்ற மீனவர் அணியைச் சேர்ந்த முனுசாமியைப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை.

பொது இடத்தில் சிலை வைக்கும்போது, மக்கள் கருத்தை மதிக்க வேண்டும். சமூக சேவை மற்றும் இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அங்கே சிலை வைக்க வேண்டாம் என்று தான் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். சிலை வைக்கும் விவகாரத்தில் மீனவர்களுக்குத் தான் ஆதரவு. மக்கள் கருத்தை ஏற்காமல் திமுக, அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்தால் மக்கள் அதை விரும்பமாட்டார்கள்.

ஒரு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பின்படி, வேறு எந்த மாநிலத்திலும் எந்த முதலமைச்சரும் இல்லாதவாறு, ஆறு மாதங்களில் பதினாறு சதவீதம் இமேஜ் சரிவு ஏற்பட்டது தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலினுக்கு தான். அதனால், அலர்ஜியாகி ஓடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், பொது இடத்தில் அமைச்சர்களின் செயல்பாடுதான். அவர்கள் மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிகிறது. ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகை காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த பாஜக பிரமுகர்கள் மீது சைபர் கிரைம் வழக்கு!

Last Updated : Feb 1, 2023, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.