ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டதால் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தமுள்ள, 238 வாக்கு சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, 286 வாக்குபதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாடு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (பிப். 10) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானதால் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆகவே கூடுதலாக 1000 வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும், 5 வாக்குப்பதிவு 1 கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் பொருத்தப்பட உள்ளது. கூடுதல் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி கிருஷ்ணனுன்னி தலைமையில் இன்று நடந்தது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இயந்திரங்களை பரிசோதித்து அதனை சரிபார்க்கின்றனர். இந்த பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:'கை' சின்னத்திற்காக களமிறங்கும் கமல்.. ஈரோடு கிழக்கில் 3 நாட்கள் பரப்புரை