ETV Bharat / state

மினிட் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அதிமுக ஊராட்சி தலைவர்:வார்டு உறுப்பினர்கள் புகார்! - ஊராட்சி மன்றத் தலைவர்

ஈரோட்டில் ஊராட்சி மன்றச் செயலாளரை பணியிட மாற்றம் செய்வதற்காக சட்டவிரோதமாக மினிட் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை
அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை
author img

By

Published : Jun 27, 2021, 2:20 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கரசம்பாளையத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார்.

இவர் வார்டு உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுள்ளார். அப்போது வார்டு உறுப்பினர்கள், கடந்த ஜூன் 18ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தின்போதே தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, ஊராட்சியில் பைப்லைன் இணைப்பு கொடுப்பதற்காக அவசரமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதற்காக கையெழுத்து இடுமாறும் ஊராட்சி மன்றத் தலைவர் கூறியுள்ளார். இதில், சந்தேகமடைந்த வார்டு உறுப்பினர்கள் இது குறித்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வகாப்பிற்குத் தகவல் தெரிவித்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் மீது புகார்:

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வகாப், ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியனிடம் தீர்மானப் புத்தகத்தைக் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.

பின்னர், அதனை வாங்கி பார்த்தபோது அதில் ஊராட்சி மன்றத் தலைவர் தன்னிச்சையாக, ஊராட்சி மன்றச் செயலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனத் தீர்மானம் எழுதி, அதனை வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற முயற்சித்தது தெரியவந்தது.

அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் விதிகளை மீறி தீர்மானப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும், இது குறித்து அலுவலர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: நிறைவேறியது கோரிக்கை: நிம்மதி பெருமூச்சுடன் கிளிக்கொடி மக்கள் நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.