ஈரோடு: பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏ. பண்ணாரி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பவானிசாகர், சத்தியமங்கலத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பேசினர்.
அமைச்சர் கருப்பணன் பேசுகையில்,
'இந்தத் தேர்தலில் நல்ல வேட்பாளர் கிடைத்துள்ளார். வேட்பாளர் பெயர் பண்ணாரி என்பதால் அவருக்கு சீட் கிடைத்துள்ளது. இவருக்கு அளிக்கும் வாக்கு பண்ணாரி சுவாமிக்கு அளிக்கும் வாக்கு. இவருக்கு பண்ணாரி சாமி அருள் கிடைத்துள்ளது. இதை எல்லோரிடத்திலும் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் எனக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பண்ணாரி கோயில் பெயரை வைத்துள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோயிலில் வழிபட்டு பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர்