ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் திம்பம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தை, யானை, புலி, லங்கூர் குரங்குகள் உள்ளன. இதற்கிடையில் தற்போது மழைப்பொழிவால் திம்பம், கடம்பூர் மலைப்பகுதி அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
இதையொட்டி பசுமை மலைப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகள் அங்கு ஆர்வத்துடன் செல்கின்றனர். இந்நிலையில், தீபாவளி விடுமுறை பண்டிகையை முன்னிட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மலைப்பகுதிக்கு செல்கின்றனர்.
இதற்கிடையே கடம்பூர் மலைப்பாதையில் நின்று இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதும் வனவிலங்குகளை தொந்தரவு செய்வதும் சட்டப்படி குற்றம் என சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வனத்தில் வாழும் குரங்குகள் பழங்களை சாப்பிட்டு பழகிய நிலையில் பொறித்த திண்பண்டங்களை கொடுக்க வேண்டாம் என்றும், மலைப்பகுதியில் கொட்டும் அருவிகளில் பாறைகள் மீது மது அருந்தினால் கைது செய்யப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.