ETV Bharat / state

லாரியை முந்தி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் விபத்து!

author img

By

Published : Jun 29, 2021, 2:01 PM IST

லாரியை முந்தி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் சாலையோர மளிகைக் கடையில் மோதி, சாக்கடையில் இறங்கி நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரியை முந்தி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் விபத்து!
லாரியை முந்தி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் விபத்து!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சிக்கரசம்பாக்கத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது.

அப்போது கடை வீதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் முன்னர் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர மளிகைக் கடையில் மோதி, அருகில் இருந்த சாக்கடையில் இறங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை சாக்கடையில் இருந்து மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

இதையும் படிங்க:திருமணத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை: ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.