ஈரோட்டில் பவானிசாகர் வனப்பகுதியில் அடர்ந்த காட்டிற்கு நடுவில் ஆதி கருவண்ணராயர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பௌர்ணமி தினத்தில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிந்து லட்சக்கணக்கான மக்கள் வருகைதருகின்றனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாடிய பகுதி என்பதால் தீவிரமாகச் சோதனைசெய்த பிறகே பொதுமக்களைக் காவல் துறையினர் உள்ளே அனுமதிக்கின்றனர்.
இதையடுத்து, கிடா விருந்துக்குத் தேவையான பொருள்களுடன் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோயில் திருவிழா நடந்துவருவதால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மது பாட்டில்கள் எடுத்து வரக்கூடாது என வனத் துறையினர் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர்.
இதையும் படிங்க: இனி இடைத்தரகர் தேவையில்லை... முழுப்பயனும் விவசாயிகளுக்கே! - தி.மலையில் அசத்தும் ஆட்சியர்