ETV Bharat / state

'கழிவு நீர் அதிகம் கலக்கும் பகுதியைக் கண்டறிந்து அலாரம்' - அறிவியல் கண்காட்சியில் ருசிகரக் கருவி!

ஈரோடு : தனியார் பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானி 2019 என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்று வருகிறது.

author img

By

Published : Oct 3, 2019, 10:00 PM IST

college stucents

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானி 2019 என்கிற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த அறிவியல் கண்காட்சிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் 596 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்தப் படைப்புகளில் விவசாயம் சார்ந்த படைப்புகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக காவிரி ஆறு செல்லும் வழியில் கழிவு நீர் அதிகளவில் கலக்கும் பகுதியை கண்டறிந்திடவும், கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து அலுவலர்களுக்கு தெரிவித்திடும் வகையில் அலாரத்தை அமைத்திருந்தனர்.

இதேபோன்று, வேகத்தடையில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்களை இயக்க முற்பட்டால் கடும் சப்தத்துடன் அலாரம் அடிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு கருவியும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

மேலும், விவசாய நிலங்கள் அழிந்து வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலேயே தங்களுக்குத் தேவைப்படும் காய்கறிகளை சாகுபடி செய்து கொள்ளும் முறை, மஞ்சளை எவ்வித பாதிப்புமின்றி எடுக்கும் முறை, மொழி மாற்ற செயலி, காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் கருவி என பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற படைப்புகளை நடுவர் குழுவினர் பார்வையிட்டு அதில் சிறப்பான படைப்புகளைத் தேர்வு செய்து அதற்கு சிறந்த பரிசுகளும் போட்டியின் கடைசி நாளில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாயைப் பிரிந்து தவித்த யானைக் கன்று மீட்பு!

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.03

தனியார் கல்லூரியில் விஞ்ஞானி அறிவியல் கண்காட்சி - மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம்பிடிப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானி என்கிற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் காவிரி ஆற்றில் மாசு ஏற்படுவதை கண்காணித்து அலுவலர்களுக்கு ஆபத்து அலாரத்தை அனுப்பும் கருவி உள்பட 596 படைப்புகளை மாணவ,மாணவியர் அமைத்திருந்தனர்.

Body:ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானி 2019 என்கிற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி போட்டி இன்று தொடங்கியது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த அறிவியல் கண்காட்சிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். அறிவியல் கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் 596 அறிவியல் படைப்புக்களை காட்சிப் படுத்தியிருந்தனர்.

இந்தப் படைப்புகளில் விவசாயம் சார்ந்த படைப்புகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக காவிரி ஆறு செல்லும் வழியில் கழிவு நீர் அதிகளவில் கலக்கும் பகுதியை கண்டறிந்திடவும், அதிகளவில் கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து அலுவலர்களுக்கு தெரிவித்திடும் வகையில் அலாரத்தை அமைத்திருந்தனர்.

அதேபோல் வேகத்தடையில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்களை இயக்க முற்பட்டால் கடும் சப்தத்துடன் அலாரம் அடிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு கருவியும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. Conclusion:மேலும் விவசாய நிலங்கள் அழிந்து வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலேயே தங்களுக்குத் தேவைப்படும் காய்கறிகளை சாகுபடி செய்து கொள்ளும் முறை, மஞ்சளை எவ்வித பாதிப்புமின்றி எடுக்கும் முறை, மொழி மாற்ற செயலி, காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் கருவி என பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படைப்புக்களை நடுவர் குழுவினர் பார்வையிட்டு அதில் சிறப்பான படைப்புக்களை தேர்வு செய்து அதற்கு சிறந்த படைப்புக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

பேட்டி : நிகிலேஷ், விஷால் – படைப்புக்களை அமைத்திருந்தவர்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.