ஈரோடு : காலிஙாகராயன் பழையூரில் 1.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை , மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, பட்டத்தரசம்மன் கோயில் வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கி நின்ற கழிவு நீர் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்ததாகவும், சுற்றிலும் தனியார் இடங்களாக இருப்பதால், தேங்கிய கழிவுநீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வந்ததால், மெயின் சாலைக்கு கழிவுநீரை கொண்டு செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் 4 பகுதியாக பிரித்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பது குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ள நிலையில், சுமார் 20 இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இளைஞர்கள் மட்டும் 20 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்றும் கூறினார். கோபிச்செட்டிபாளையம் தனி மாவட்டமாக பிரிப்பது தொடர்பான கேள்விக்கு, தற்போது அதற்கு உண்டான தகவல்கள் எதுவும் இல்லை என்பதால், பதிலளிக்க இயலாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க : சென்னையில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு!