ஈரோடு மாநகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வீரப்பன்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டியை சேர்ந்த மணிகண்டன்,நடராஜபுரத்தை சேர்ந்த தவச்செல்வன் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனம் ரூ.4,383 கோடி மோசடி