ஈரோடு அருகேயுள்ள 46 புதூர் வள்ளிகார்டன் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பரமசிவம் அம்சவேணி. பரமசிவம் கான்கிரீட் பணிக்காக முட்டு மரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார்.
இவரது மகன் வெளியூரில் பணிபுரிந்து வருவதால் பரமசிவமும், அவரது மனைவியும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.
வழக்கம்போல் நேற்றிரவு (அக்.17) பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் உணவருந்தி விட்டு வீட்டு முதல் மாடியில் உறங்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (அக்.18) அதிகாலை வீட்டு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்காக கீழிறங்கிய அவரது மனைவி வீட்டு முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், கீழ் அறையிலுள்ள பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி தகவலைத் தெரிவித்துள்ளார்.
பரமசிவமும் கீழிறங்கி வந்து கடும் அதிர்ச்சியடைந்ததை அடுத்து, தாலூகா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.
இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதிகளில் மாடுகள் திருடிய 3 பேர் கைது; 6 பசுமாடுகள் மீட்பு