ETV Bharat / state

காலாண்டு, அரையாண்டில் தோல்வி அடைந்தவர்களுக்கு மதிப்பெண் எப்படி?

ஈரோடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 11, 2020, 2:23 PM IST

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்ச் சந்திப்பு

ஈரோட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் 700 காய்கறிச் சந்தையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டம் கரோனா தொற்றிலிருந்து வெளிவந்த மாவட்டமாகியுள்ளது. இதற்காக இரவு, பகலாகப் பணியாற்றிய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நன்றி” என்றார்.

மேலும், பத்தாம் வகுப்புத் தேர்வில் காலாண்டு, அரையாண்டில் தேர்ச்சி பெறாத மாணாக்கருக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நூலகம் திறப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...கட்டுப்பாடுகளை மீறினால் முகாமில் அனுமதி- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.