ETV Bharat / state

தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஈரோடு: சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த, பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கம்பத்தைச் சுற்றிவந்து பாரம்பரிய நடனம் ஆடிக் கொண்டாடினர்.

தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா
author img

By

Published : Apr 26, 2019, 2:04 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசித்திப்பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் விழா, கம்பம் ஆடும் விழா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் அழைப்பும், புதன்கிழமை காலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை இக்கோயில் முன்பாக நடப்பட்ட கம்பத்திற்குப் பெண்கள் மஞ்சள் பூசி வழிபட்டனர்.

தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா

தொடர்ந்து, கம்பத்தைச் சுற்றிவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாள இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர். பெண்கள் தட்டில் பூசை பொருள்களுடன் தீபம், மாவிளக்கு வைத்து ஊர்வலமாகச் சென்றது அனைவரையும் கவர்ந்தது. இளம்பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது.

சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற   தண்டுமாரியம்மன் கோயில் கம்பம் ஆடும் விழா  

-- 
TN_ERD_SATHY_01_26_KAMBAM_DANCE_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
26.04.2019 

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடந்த  பொங்கல் விழாவையொட்டி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கம்பத்தை சுற்றிவந்து பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடினர்.

சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் விழா கம்பம் ஆடும் விழா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோவில் முன் நடப்பட்ட  கம்பத்திற்கு  பெண்கள்  மஞ்சள் பூசி வழிபட்டனர்.கோவிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் அழைப்பும்  புதன்கிழமை காலை பக்தர்கள்  குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பங்கேற்று பக்தர்கள் தீ மிதித்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தும் முளைப்பாரியை காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், மண்உருவபொம்மைகள் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மன் அனுக்கிரகம் வேண்டினர். மேலும் பெண்கள் குழந்தைகள் புத்தாடை உடுத்தி மாவிளக்கு ஊர்வலம் வந்தனர். 

வியாழக்கிழமை மாலை கோவிவின் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிவந்து  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேள தாள இசைக்கேற்பு நடனமாடி மகிழ்ந்தனர். பெண்கள் தட்டில் பூஜை பொருள்களுடன் தீபம், மாவிளக்கு வைத்து ஊர்வலமாக சென்றது அனைவரையும் கவர்ந்தது. இளம்பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் வெகுவிமரிசையாக நடந்தது.

26.04.2019 ERD SATHY KAMBAM DANCE NEWS
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.