திண்டுக்கல்: பழனி ஆர்எம்கே நகரை சேர்ந்தவர் பிரசாந்த். கார் மெக்கானிக்காக பணிபுரியும் இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானல் சாலையில் மது அருந்திவிட்டு பழனி கோவை புறவழிச் சாலையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். மருத்துவ நகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த தண்டபாணி என்பவரின் வீட்டிற்குள் புகுந்ததது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கார் உள்ளே புகுந்த விபத்தால் வீடு முழுவதும் சேதம் அடைந்தது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காரில் வந்த இளைஞர்களை பிடித்து அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பழனி அடிவாரம் போலீசார் இளைஞர்களை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு