திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் பேரூராட்சி சார்பாக அமைக்கப்பட்ட மின்விளக்கு கோபுரத்தின் கீழ் நேற்றிரவு தாசிரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜேஷ் என்பவர் மதுபோதையில் வந்து அமர்ந்திருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழிந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் ராஜேஷின் உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பறவைகளின் தாகத்தை தீர்க்க ரயில்வே காவல் துறை புதுமுயற்சி'