திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புலிக்குத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (20). அவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரின் மகள் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கினார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சரவணக்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!