திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு அவ்வப்போது ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து நேற்றிரவு ஒட்டன்சத்திரம் காவல் துறை ஆய்வாலர் தலைமையில் ரோந்து பணி சென்ற போலீசார் பல்வேறு பகுதியில் சோதனை மேற்க்கொண்டனர்.
அப்போது ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை பகுதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் மூன்று கிலோ கஞ்சாவை கடந்த முயன்றதை பார்த்த போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டை போலீசார் சோதனை மேற்கொண்டதில் சுமார் 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அனைத்து புகையிலை மண்டலங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய குற்றவாளி பாலசுப்பிரமணியை ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏசி வெடித்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!