ETV Bharat / state

தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்ற இளைஞர் பலி! - தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்ற இளைஞர் பலி!

திண்டுக்கல்: தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார்.

youngster died in water tank at dindugal

author img

By

Published : May 6, 2020, 5:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் தாராபுரம் சாலையில் வசித்துவருபவர் எலக்ட்ரீசியன் முனுசாமி. இவருடைய மகன் விஷ்ணு (22). சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ள விஷ்ணு, ஒட்டன்சத்திரம் பெரிய குளிப்பட்டியிலுள்ள அவரது தாத்தா திருப்பதி வீட்டிற்கு இன்று காலை சென்றுள்ளார்.

விவசாயியான திருப்பதி, கிணற்றிலிருந்து வயலிற்கு நீர் பாய்ச்சுவதற்காக பெரிய சிமெண்ட் தொட்டி ஒன்றை அமைத்துள்ளார்.

நீச்சல் தெரியாத விஷ்ணு தண்ணீர் தொட்டியில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். பின்னர் நிலைதடுமாறிய அவர், தொட்டிக்குள் மூழ்கியுள்ளார். இதனைக்கண்ட விஷ்ணுவின் மாமா அவரை மீட்க முயன்றுள்ளார். அவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் தொட்டியிலிருந்து வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர், விஷ்ணுவின் தாத்தாவும், அக்கம் பக்கத்தினரும் இருவரையும் மீட்க முயன்றதில் விஷ்ணு மூச்சுத் திணறி தொட்டிக்குள்ளேயே உயிரிழந்தார். அவரது மாமா மீட்கப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: மின்னல் தாக்கி பெண் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.