ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அனுபவம் எப்படி இருக்கிறது? பகிரும் இளைஞர்கள்!

author img

By

Published : Dec 27, 2019, 8:50 AM IST

திண்டுக்கல்: வாக்குச் சீட்டு மூலம் வாக்குப்பதிவு செய்தது புது அனுபவமாக இருந்தது என முதன்முறையாக வாக்குப்பதிவு செய்த இளைஞர்கள், பெண்கள் தெரிவித்துள்ளனர்.

young-voters-
young-voters-

திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 27 பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக 1,160 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காலை ஏழு மணி முதல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த இளைஞர்கள் வாக்கு இயந்திரம் இன்றி வாக்குச்சீட்டுகளில் வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டியளித்த வாக்காளர் அனீஸ் பாத்திமா கூறுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து இருந்தாலும் இதுவே முதல் உள்ளாட்சித் தேர்தல். வழக்கமாக வாக்கு இயந்திரங்களில் வாக்களித்துவிட்டு வண்ண சீட்டுகளில் வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது. இதற்காக தனி அவகாசம் கொடுக்கப்பட்டது. நிதானமாக தேர்வு செய்து சரியான சின்னத்திற்கு வாக்களித்தேன்’ என்று கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அனுபவம்: பகிரும் இளைஞர்கள்

இதுகுறித்து, இளைஞர் ஒருவர் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச் சீட்டு மூலம் வாக்குப்பதிவு செய்தது. புதுவித அனுபவமாக இருந்ததாகவும், நான்கு பதவிகளுக்கு வாக்குப்பதிவு செய்தது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க... உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாகப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.