திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு மலை சாலைகளில் பூத்திருக்கும் பல்வேறு வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைந்திருக்கும். முன்பனிக்காலத்தை வரவேற்கும் விதமாக, கொடைக்கானல் வத்தலகுண்டு மற்றும் பழனி பிரதான சாலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிற மலர்கள் (பெல்டோ போரம் டூபியம்) பூக்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தட்வெப்ப நிலை குளிர்ச்சியாக மாறியுள்ளது. மேலும், மழையால் பல பகுதிகளில் பசுமை திரும்பியுள்ள நிலையில், அங்காங்கே இந்த மஞ்சள் நிற பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக காட்சியளிக்கிறது.
தொடர் ஊரடங்கு காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் உள்ளது. இதனால் நகரம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தண்ணீர் திறப்பு: பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை!