திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான அமமுக பிரமுகரும், கல்லூரி தாளாளருமான ஜோதிமுருகனுக்கு மகளிர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதனைக் கண்டித்து மகளிர் நீதிமன்றம் முன்பு மாதர் சங்க நிர்வாகிகள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்கறிஞர் ஒருவர், மற்ற பாலியல் கொடுமை தொடர்பான விவகாரத்திற்கு வராத மாதர் சங்கம் சில வழக்குகளில் மட்டும் தலையிடுவது ஏன் எனக் கேள்வி கேட்டார். அதற்கு மாதர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞரைத் தாக்க முயன்றனர்.
பின்னர் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஓடி தஞ்சமடைந்தார். தொடர்ந்து, மாதர் சங்க நிர்வாகிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் நீதிமன்றம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்