திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 20 கிமீ தொலைவில் அஞ்சுவீடு அருவி அமைந்துள்ளது. இந்த அருவியானது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
இந்நிலையில், தனியார் தங்கும் விடுதியில் அரக்கோணத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் வேலை பயிற்சிக்காக வந்துள்ளார். தனது சக நண்பர்களுடன் அஞ்சுவீடு அருவிக்கு சுற்றி பார்க்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருவியில் விழுந்துள்ளார். அப்போது, அவரது சக நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்ரீதேவியை மீட்க முயற்சித்தனர்.
அவிநாசி சாலையில் தீப்பற்றி எரிந்த வாகனம்
இருந்தும், 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ஸ்ரீதேவி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், ஊர் பொதுமக்கள் இறந்தவரின் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறாய்வுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவரின் இறப்பு குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.