திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆயக்குடி அருகே உள்ள கோம்பைப்பட்டி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள தோட்டங்களில் விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளன.
கடந்த சில வாரங்களாக யானைகள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் யானைகள் அதே பகுதியில் உள்ள விவசாயி வேலுசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்து தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி சென்றுள்ளது.
வேலுசாமி வழக்கம்போல் தோட்டத்துக்குச் சென்று பார்க்கும்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், வாழை மரங்கள் முறிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து கோம்பைப்பட்டி பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளை: மாஸ்டர் பிளான் முருகனிடம் காவல் துறை விசாரணை